திமுக ஆட்சியின் பல்வேறு திட்டங்களால் கல்வியில் முன்னோடி மாநிலமாக தமிழ்நாடு இன்று திகழ்கிறது: தமுமுக தலைவர் ஜவாஹிருல்லா பேச்சு

 

சென்னை: சென்னையில் சமூக நீதி மாணவர் இயக்கத்தின் வெள்ளி விழா மாநாடு நேற்று நடந்தது. இதில் சிறப்பு விருந்தினராக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டார். விழாவில் தமுமுக தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா பேசியதாவது: தமிழ்நாடு இன்று கல்வியில் முன்னோடி மாநிலமாக திகழ்கிறது. இந்தியாவிலேயே திராவிட மாடல் ஆட்சியில் தமிழ்நாடு உயர்ந்து நிற்கிறது.

உயர்கல்வியல் மாணவர் சேர்க்கை விகிதம் இந்தியாவில் சராசரியாக 28.4%, உள்ள நிலையில் தமிழ்நாட்டில் மிக அதிகமாக 47 விழுக்காடு உள்ளது. பெண்கள் உயர் கல்வி சேரும் விகிதத்திலும் நாம் உயர்ந்து நிற்கிறோம். ஆனாலும் தமிழ்நாட்டில் வாழும் அனைத்து இளைய தலைமுறையினரும் 100 விழுக்காடு உயர் கல்வியில் சேரும் இலக்கை அடைய சமூக நீதி மாணவர் இயக்கத்தின் மாணவர்கள் அயராது பாடுபட வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

Related Stories: