அருப்புக்கோட்டை: புதிய தமிழகம் கட்சி நிறுவனத் தலைவர் கிருஷ்ணசாமி அருப்புக்கோட்டையில் நேற்று அளித்த பேட்டி: வரும் சட்டமன்ற தேர்தலை மிக முக்கியமான தேர்தலாக கருதுகிறோம். கூட்டணி ஆட்சிக்கான கூட்டணியை உருவாக்குவது தான் புதிய தமிழகம் கட்சியின் லட்சியம். கூட்டணி ஆட்சி வர வேண்டும் என்று யார் தயாராக இருக்கிறார்களோ அவர்களிடம் புதிய தமிழகம் கட்சி பேசும். யாராவது ஒருவரிடம் கையேந்துவதை புதிய தமிழகம் விரும்பவில்லை. கூட்டணி ஆட்சிக்கு பல கட்சிகள் ஒருங்கிணைய வாய்ப்பு உள்ளது’’ என்று தெரிவித்தார். ‘‘ஆட்சியில் பங்கு எனக் கூறுகிறீர்களே அப்படி என்றால் தவெகவுடன் கூட்டணி என எடுத்துக் கொள்ளலாமா’’ என செய்தியாளர்கள் கேட்டதற்கு, ‘எங்கள் பாதையில் நாங்கள் தெளிவாக இருக்கிறோம். 2026ல் ஒரு மாற்றம் ஏற்பட வேண்டும். கூட்டணி ஆட்சியால்தான் அது நிகழும்’’ என கிருஷ்ணசாமி தெரிவித்தார்.
