மே 3ம் தேதி நீட் தேர்வு: மார்ச் 8ம் தேதி வரை விண்ணப்பம் செய்யலாம்

 

சென்னை: மே 3ம் தேதி நடைபெறவுள்ள இளநிலை நீட் தேர்விற்கு மார்ச் 8ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் எனத் தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. நாடு முழுவதும் அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளின் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகள் மற்றும் சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஹோமியோபதி படிப்புகள் மற்றும் கால்நடை மருத்துவப் படிப்பின் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கு நீட் தேர்வு மூலம் மாணவர் சேர்க்கை நடத்தப்படுகிறது.

அதேபோன்று, ராணுவக் கல்லூரிகளில் பிஎஸ்சி நா்சிங் படிப்புக்கு நீட் தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. நீட் தேர்வை தேசிய தேர்வுகள் முகமை (என்டிஏ) ஆண்டுதோறும் நடத்தி வருகிறது. அதன்படி, 2026-27ம் கல்வியாண்டுக்கான நீட் தேர்வு வரும் மே 3ம் தேதி நாடு முழுவதும் நடைபெற உள்ளது. தமிழ், ஆங்கிலம், ஹிந்தி உள்பட 13 மொழிகளில் நடைபெறும் இந்தத் தேர்வுக்கான இணையதள விண்ணப்பப் பதிவு நேற்று(பிப். 8) தொடங்கியுள்ளது. இதற்கான கால அவகாசம் மார்ச் 8ம் தேதி நிறைவு பெறவுள்ளது.

இதையடுத்து விருப்பமுள்ள மாணவர்கள் https://neet.nta.nic.in என்ற இணையதளம் வழியாக விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்வுக்கு விண்ணப்பிக்கும் வழிமுறைகள், கட்டணம் உள்ளிட்ட தகவல்களை மின்னஞ்சல் வாயிலாகவோ, 011 40759000 என்ற தொலைபேசி எண்ணிலோ அறிந்து கொள்ளலாம். நீட் தேர்வுக்கான கட்டணம் பொதுப்பிரிவுக்கு ரூ.1700, பிற்படுத்தப்பட்டோருக்கு ரூ.1600, எஸ்சி – எஸ்டி பிரிவுக்கு ரூ.1000 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதனுடன் ஜிஎஸ்டி மற்றும் சேவைக் கட்டணம் கூடுதலாக வசூலிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீட் தேர்வில் 180 வினாக்கள் கேட்கப்படும். ஒவ்வொரு வினாவுக்கும் தலா 4 மதிப்பெண்கள் வீதம் மொத்தம் 720 மதிப்பெண்களுக்கு அந்தத் தோ்வு நடைபெறுகிறது. தாவரவியல் மற்றும் விலங்கியலை உள்ளடக்கிய உயிரியல் பாடத்தில் இருந்து 360 மதிப்பெண்களுக்கும், இயற்பியல் மற்றும் வேதியியலில் தலா 180 மதிப்பெண்களுக்கும் கேள்விகள் இடம்பெறும்.
இந்நிலையில், அதற்கான பாடத் திட்டங்கள் https://nmc.org.in/ இணையதளப் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் கேள்விகள் இடம்பெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Related Stories: