சிறுமி பலாத்காரம் ஆர்எஸ்எஸ் தொண்டர் கைது

திருவனந்தபுரம்: கேரள மாநிலம் கோழிக்கோடு அருகே உள்ள முக்கம் என்ற பகுதியைச் சேர்ந்தவர் பாபுராஜ் (50). இவர் ஆர்எஸ்எஸ் தொண்டர் ஆவார். இவர் தன்னுடைய பக்கத்து வீட்டைச் சேர்ந்த 9 வயது சிறுமியை ஆளில்லாத நேரத்தில் தன்னுடைய வீட்டுக்கு அழைத்துச் சென்று பலமுறை பலாத்காரம் செய்து வந்துள்ளார். இது குறித்த தகவல் அறிந்த சிறுவர் நல ஆணைய அதிகாரிகள் உடனடியாக முக்கம் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து பாபுராஜை கைது செய்தனர்.

Related Stories: