மயிலாடுதுறை,பிப்.5: மயிலாடுதுறையில் போதைப்பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வு விளையாட்டு போட்டிகள் இன்றும், நாளையும் 2 நாட்கள் நடக்கிறது. மயிலாடுதுறை மாவட்டத்தில் போதைப்பொருள் பயன்பாட்டிற்கு எதிராக விழிப்புணர்வினை ஏற்படுத்தும் பொருட்டு இன்று (5ம்தேதி) காலை 8 மணியளவில் மயிலாடுதுறை சாய் விளையாட்டு அரங்கத்தில் கல்லூரி மாணவ மாணவியர்களுக்கான சதுரங்கம்,
கபடி போட்டிகள் மற்றும் நாளை (6ம்தேதி) காலை 8 மணியளவில் பள்ளி மாணவ மாணவியர்களுக்கான சதுரங்கம், கபடி, 400மீ ஓட்டப்பந்தயம் நடைபெறவுள்ளது. தொடர்ந்து, மயிலாடுதுறை மாவட்டத்தைச் சேர்ந்த 15 முதல் 25 வயதுடைய விருப்பமுடைய பொதுமக்கள் மேற்படி போட்டிகளில் கலந்துகொள்ளுமாறு மாவட்ட கலெக்டர் ஸ்ரீகாந்த் கேட்டுக்கொண்டுள்ளார்.
