சாம்பியன்ஸ் டிராபியின் போது ஐசிசி தூங்கிக்கொண்டிருந்ததா? மாஜி பாக். வீரர் கம்ரன்அக்மல் காட்டம்

 

லாகூர்: டி.20 உலக கோப்பை தொடரில் ஏ பிரிவில் இடம்பெற்றுள்ள இந்தியா-பாகிஸ்தான் அணிகள் வரும் 15ம் தேதி கொழும்பில் மோத உள்ளன. ஆனால் இந்த போட்டியை புறக்கணிக்கப்போவதாக பாகிஸ்தான் தெரிவித்துள்ளது. ஆனால் இதுபற்றி இன்னும் அதிகாரப்பூர்வமாக அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவிக்கவில்லை. இதுபற்றி பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் கம்ரான் அக்மல் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில், பாகிஸ்தான் அணியும், கிரிக்கெட் வாரியமும் இந்த முடிவில் உறுதியாக இருக்க வேண்டும். பிசிபி பின்வாங்கக்கூடாது. இந்திய போட்டியை புறக்கணிக்கும் நிலைப்பாட்டை மறுபரிசீலனை செய்யுமாறு ஐசிசி கூறியுள்ளது. இந்தியா சாம்பியன்ஸ் டிராபியை பாகிஸ்தானில் விளையாட மறுத்து நடுநிலையான இடத்தில் மட்டுமே விளையாடும் என்று கூறியபோது ஐசிசி தூங்கிக் கொண்டிருந்ததா?.

இரு நாடுகளும் பல ஆண்டுகளாக இருதரப்பு தொடர்களை விளையாடவில்லை. அதுவும் அரசியல் இல்லையா?. அப்போது அரசியலை முடிவுக்குக் கொண்டுவர ஐ.சி.சி நினைத்திருக்க வேண்டாமா?. கலப்பின மாதிரியில் விளையாடுவதற்கான இந்தியாவின் முடிவை நாங்கள் மதித்தது போல் பிசிபியின் முடிவையும் மதிக்க வேண்டும். ஆசிய கோப்பையில், அவர்கள் எங்கள் வீரர்களுடன் கைகுலுக்க மறுத்துவிட்டனர். பின்னர் கோப்பையை ஏ.சி.சி தலைவர் மொஹ்சின் நக்வியிடமிருந்து. வாங்க மறுத்து அவமதித்தனர். இவ்வாறு அவர் சாடிஉள்ளார்.

Related Stories: