திருவாரூர் 25வது வார்டு பகுதியில் சமுதாய கழிவறை சீரமைப்பு

திருவாரூர்,பிப்.4: திருவாரூர் நகராட்சி 25வது வார்டு பகுதியில் இருந்து வரும் சமுதாய கழிவறை சீரமைக்கப்பட்டது. இது பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது. திருவாரூர் நகராட்சி 25வது வார்டுக்குட்பட்ட விஜயபுரம் கடைத்தெருவில் நகராட்சி சார்பில் தூய்மை இந்தியா திட்டம் 2.0 திட்டத்தின் கீழ் கடந்த 2021-22 நிதியாண்டு தொகையில் ரூ.24 லட்சத்து 96 ஆயிரம் மதிப்பில் கட்டப்பட்டு பயன்பாட்டில் இருந்து வந்த சமுதாய கழிப்பிடம் பாதாள சாக்கடை அடைப்பு காரணமாக பூட்டப்பட்டு இருந்தது. இந்நிலையில் நேற்று நகராட்சி ஊழியர்கள் மூலம் அடைப்பு சரிசெய்யப்பட்டு பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இதையொட்டி நகராட்சி நிர்வாகத்திற்கு பொது மக்களும், வர்த்தகர்களும் நன்றி தெரிவித்துள்ளனர்.

 

 

Related Stories: