கோவை, பிப். 4: கோவை மாநகராட்சியில் 2026-2027ம் ஆண்டுக்கான பட்ஜெட் வரும் 16ம் தேதி தாக்கல் செய்யப்பட உள்ளது. முன்னதாக கடந்த மாதம் 20ம் தேதி பட்ஜெட் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் மாநகராட்சி அலுவலகத்தில் நடந்த்து. இதில், மண் சாலைகளை தார் சாலைகளாக மாற்றுதல், விடுபட்ட இடங்களில் மழைநீர் வடிகால் அமைத்தல், சத்தி சாலையில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க நடவடிக்கை, மழைநீர் வடிகால்களைத் தூர்வார 2 ஆயிரம் நிரந்தரப் பணியாளர்களை நியமித்தல் போன்றவை தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது.
மேலும் பில்லூர் 3வது குடிநீர் திட்டப் பயன்கள் பொதுமக்களுக்கு முழுமையாகச் சென்றடைவதை உறுதி செய்ய வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகள் பட்ஜெட்டில் இடம்பெற வேண்டும் என கவுன்சிலர்கள் வலியுறுத்தியுள்ளனர். இந்த கோரிக்கைள் வரும் பட்ெஜட்டில் நிறைவேற்றப்படுமா என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
