நீட் தேர்வில் இருந்து முழு விலக்கு அளிக்க வேண்டும்

கோவை, பிப்.4: கோவை ஆடிஸ் வீதியில் உள்ள பத்திரிகையாளர் மன்றத்தில் இந்திய மாணவர் இஸ்லாமிய அமைப்பினர், சட்டமன்ற தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையை வெளியிட்டனர். அதில் கூறிருப்பதாவது, ‘‘இஸ்லாமியர்களுக்கு எதிரான வெறுப்பை விதைக்கும் வகையிலான பேச்சுகளை தடுக்கும் வகையில், தமிழகத்தில் வெறுப்பு பேச்சுக்கு எதிராக சட்டம் இயற்ற வேண்டும்.

நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு முழுமையாக விலக்கு அளிக்க வேண்டும். கல்வி வளாகங்களுக்கு அருகில் இருக்கும் டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும். கல்வி வளாகங்களில் மாணவர் சங்கத் தேர்தலை மீண்டும் நடைமுறைக்கு கொண்டுவர வேண்டும். அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளில் காலியாக உள்ள உதவி பேராசிரியர்கள் பணியிடங்களை நிரப்ப வேண்டும்.

பழங்குடிகள் அனைவருக்கும் சரியான முறையில் சாதி சான்றிதழ் வழங்க வேண்டும். உதவி பேராசிரியர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் நிர்ணயம் செய்ய வேண்டும். அனைத்து கல்விக்கடன்களையும் தமிழக அரசு தள்ளுபடி செய்ய வேண்டும். கல்வி, வேலைகளில் இஸ்லாமியர்களுக்கான இட ஒதுக்கீட்டை உயர்த்த வேண்டும்’’ இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

 

Related Stories: