அண்ணா சிலைக்கு மரியாதை

தேனி, பிப். 4: பெரியகுளத்தில் அண்ணா சிலைக்கு அதிமுகவினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர் . பேரறிஞர் அண்ணா நினைவு நாளையொட்டி, தேனி மாவட்டம் பெரியகுளத்தில் உள்ள அண்ணா சிலைக்கு பெரியகுளம் நகர அதிமுக நகர கழகச் செயலாளர் பழனியப்பன் தலைமையில் அதிமுகவினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

இந்நிகழ்ச்சியில் நகர துணை செயலாளர் வெங்கடேசன், தலைமை கழக பேச்சாளர் வடுகபட்டியில் சுந்தர பாண்டியன்,தென் மண்டல தொழிற்சங்க செயலாளர் முபாரக்,மாவட்ட இலக்கிய அணி செயலாளர் வழக்கறிஞர் தவமணி மற்றும் சார்பு அணி நிர்வாகிகள், உள்பட பலர் கலந்துகொண்டனர்

 

 

Related Stories: