உடுமலை, பிப். 4: அறிஞர் அண்ணாவின் 57-வது நினைவு தினத்தையொட்டி திருமூர்த்திமலை அமணலிங்கேஸ்வரர் கோயிலில் நேற்று சமபந்தி விருந்து நடைபெற்றது. மேலும் சிறப்பு வழிபாடுகளும் செய்யப்பட்டன. இதில் அறங்காவலர் குழு தலைவர் மொடக்குபட்டி ரவி, திமுக தெற்கு ஒன்றிய செயலாளர் பாபு, குழு உறுப்பினர் சாமி, அறங்காவலர்கள் ராஜ்மோகன், தேவராஜ், செயல் அலுவலர் அமரநாதன் உட்பட பலர் கலந்து கொண்டனர். இதேபோல், உடுமலை மாரியம்மன் கோயிலில் நடந்த பொது விருந்தில் பரம்பரை அறங்காவலர் யுஎஸ்எஸ் ஸ்ரீதர், செயல் அலுவலர் தீபா மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
