கோத்தகிரி ஒன்றிய திமுக சார்பில் அண்ணா நினைவு தினம்

கோத்தகிரி, பிப். 4: கோத்தகிரி அருகே உள்ள கொணவக்கரையில் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். கோத்தகிரி ஒன்றிய செயலாளர் நெல்லை கண்ணன் தலைமையில், தலைமை செயற்குழு உறுப்பினர் எக்ஸ்போ செந்தில் ரங்கராஜ் முன்னிலையில் நேற்று அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அதனைத் தொடர்ந்து தூய்மை பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.

இந்தநிகழ்ச்சியில், பொதுக்குழு உறுப்பினர் வீரபத்திரன், கோத்தகிரி நகர செயலாளர் காளிதாஸ், ஒன்றிய அவைத்தலைவர் கில்பர்ட் உள்ளிட்ட ஒன்றிய கழக, பேரூர் கழக நிர்வாகிகள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், சார்பு அணிகளின் அமைப்பாளர்கள் துணை அமைப்பாளர்கள், கிளை கழக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

 

Related Stories: