பூச்சி மருந்து குடித்து வாலிபர் சாவு

வெள்ளக்கோவில், பிப். 4: வெள்ளக்கோவில் கள்ளமடை அருகே ஈஸ்வரன் மகன் வினோத் (22). இவர், கடந்த 30ம் தேதி அன்று மது போதையில் பூச்சி மருந்து குடித்துவிட்டார். உடனே அருகில் இருந்தவர்கள் வினோத்தை மீட்டு கரூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்திருந்தனர். அங்கு நேற்று முன்தினம் சிகிச்சை பலனின்றி வினோத் இறந்துவிட்டார். இது குறித்து வெள்ளக்கோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Related Stories: