ராஜபாளையம், பிப்.4: ராஜபாளையத்தில் நாளை மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. ராஜபாளையம் கோட்டத்தில் உள்ள ராஜபாளையம் உப மின்நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. எனவே பி.எஸ்.கே நகர், அழகை நகர், ஐ.என்.டி.யூ.சி நகர், மலையடிப்பட்டிதெற்கு, சங்கரன்கோவில்முக்கு, தென்காசிரோடு, அரசு மருத்துவமனை, புதிய பேருந்து நிலையம், பாரதிநகர், ஆர்.ஆர்.நகர், சத்திரப்பட்டி, எஸ்.ராமலிங்கபுரம்,
கலங்காபேரிபுதூர், மொட்டைமலை, வ.உ.சி நகர், பி.ஆர்.ஆர்.நகர், பொன்னகரம், எம்.ஆர்.நகர், லட்சுமியாபுரம், ராம்கோநகர், நத்தம்பட்டி, வரகுணராமபுரம், இ.எஸ்.ஐ காலனி, ஸ்ரீரெங்கபாளையம் ஆகிய பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்வினியோகம் தடைபடும் என ராஜபாளையம் மின் பகிர்மானம் செயற்பொறியாளர் முத்துராஜ் தெரிவித்துள்ளார்.
