சென்னை: தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர் அ.சண்முக சுந்தரம் நேற்று வெளியிட்ட அறிவிப்பு:குரூப் 2 மற்றும் மற்றும் குரூப் 2ஏ பதவிகளுக்கான முதல்நிலைத் தேர்வின் முடிவுகள் 22.12.2025 அன்று வெளியிடப்பட்டது. இப்பதவிகளுக்கான முதன்மை தேர்வு (மெயின் தேர்வு) வரும் 8ம் தேதி முற்பகலில் குரூப் 2ஏ பணிகளுக்கும் (ஒளிக்குறி உணரி வகை), 8ம் தேதி பிற்பகல் தமிழ் மொழித் தகுதித் தேர்வு (விரிந்துரைக்கும் வகை) மற்றும் 22ம் தேதி முற்பகலில் குரூப் 2 பணிகளுக்கும் (விரிந்துரைக்கும் வகை) நடைபெற உள்ளது. தேர்வு எழுத அனுமதிக்கப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கான தேர்வுக்கூட அனுமதிச் சீட்டு (ஹால் டிக்கெட் தேர்வாணையத்தின் இணையதளமான www.tnpsc.gov.in மற்றும் www.tnpscexams.inல் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
