சென்னை: தமிழ்நாட்டில் நிலையான வளர்ச்சி இலக்குகள் (Sustainable Development Goals) செயல்பாடுகளை ஒருங்கிணைத்து, கொள்கை திட்டமிடலும் கண்காணிப்பும் வலுப்பெற நிலையான வளர்ச்சி இலக்குகள் ஒருங்கிணைப்பு மையம் முக்கிய பங்கு வகித்து வருகிறது. தமிழ்நாடு அரசு திட்டமிடல் மற்றும் மேம்பாட்டுத்துறை, ஐ.நா. மேம்பாட்டுத் திட்டம் இணைந்து கடந்த 2022ம் ஆண்டு இந்த மையம் தொடங்கப்பட்டது. திட்டமிடல் மற்றும் மேம்பாட்டுத் துறையின் கீழ் திங் டாங்காக (Think Tank) செயல்படும் நிலையான வளர்ச்சி இலக்குகள் ஒருங்கிணைப்பு மையம் அரசுத் துறைகள் ஆதாரங்களின் அடிப்படையில் கொள்கைகள் உருவாக்கவும், நிலையான வளர்ச்சி இலக்குகள் கண்காணிப்பை மேம்படுத்தவும் உதவி செய்து வருகிறது.
இதன் ஒரு பகுதியாக, திறன், வேலைவாய்ப்பு, வாழ்வாதாரம், நிலையான போக்குவரத்து உள்ளிட்ட துறைகளில் கொள்கை கருத்துக் குறிப்புகள் தயாரிக்கப்பட்டுள்ளன. மாநில திட்டக்குழுவுடன் இணைந்து மாநில குறியீட்டு கட்டமைப்பு சிறப்பு முதலீட்டு நிதி 2.0 உருவாக்கப்பட்டு, துறைகள் தங்களின் முன்னேற்றத்தை முறையாக கண்காணிக்க வழிவகுக்கப்பட்டுள்ளது. மேலும், பல பரிந்துரைகள் அரசு திட்டங்களாக உருவெடுத்து, தமிழ்நாடு கார்பரேட் இணைய தளம் (2024), ‘திராணகம்’ – மாவட்ட இளைஞர் திறன் மையம் போன்ற அறிவிப்புகள் வெளியாகியுள்ளன. மேலும் இதற்கான செயல்பாடுகள் மற்றும் தொடர்பு திட்டங்களை சமூக ஊடகங்களில் தெரிந்து கொள்ளும் வகையில் இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது.
