போராட்டம் நடத்த தற்காலிக ஊழியர்களை தூண்டுகின்றனர்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி

 

சென்னை: தற்காலிக ஊழியர்களின் போராட்டம் தொடர்பான கேள்விக்கு, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அளித்த பதில்: அரசு ஊழியங்களின் போராட்டங்களில் தற்காலிக ஊழியர்கள் பணி என்பது வருடத்திற்கு 11 மாதம் என்பது மட்டுமே. அது மீண்டும் தொடரும்போது இடையில் ஒரு நாள் விடுமுறை வழங்கிவிட்டு மீண்டும் Renewel செய்யப்பட்டு பணிபுரிவார்கள். இவர்கள் பணியில் சேரும்போது Communual Roatation போன்ற பணிகள் எதுவும் இருக்காது. இதுபோன்று பணியில் இருப்பவர்களை எந்த அரசும் பணி நிரந்தரம் செய்ய முடியாது. தமிழ்நாடு மட்டுமல்ல இந்தியாவில் உள்ள வேறு எந்த மாநில அரசும் பணிநிரந்தரம் செய்ய முடியாது.

அரசு ஊழியர் போராட்டம் அல்ல, இன்னொன்று ஊழியர் சங்கங்கள் அல்ல, தனிநபரின் தூண்டுதல் இருக்கிறது என்று ஏற்கெனவே நான் சொல்லியிருக்கிறேன். பெங்களுரை சேர்ந்த ஒருவர் போராட்டத்தை தூண்டிவிட்டார், நாங்கள் அவர் மீது புகார் கொடுத்து இருக்கிறோம். போராட்டங்கள் என்பது இயல்பாக நடக்கவேண்டும். அரசிற்கு அழுத்தம் கொடுக்கும் நிலையில் தூண்டிவிடப்படும் போராட்டங்கள் குறைக்கவேண்டும் என்ற நோக்கத்தில் சொல்லியிருந்தேனே தவிர போராட்டங்களை கொச்சைப்படுத்துவது என்பது திமுக அரசாங்கத்தின் நோக்கம் அல்ல. இவ்வாறு கூறியுள்ளார்.

 

Related Stories: