எழும்பூர் ரயில் நிலையம் புனரமைப்பு: தாம்பரம், பீச்சில் இருந்து விரைவு ரயில்கள் இயக்கம்

சென்னை: சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தின் புனரமைப்பு பணிகள் காரணமாக, பல விரைவு ரயில்கள் தற்காலிகமாக தாம்பரம் மற்றும் சென்னை பீச் நிலையங்களில் இருந்து இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே நேற்று அறிவித்துள்ளது. பிப்ரவரி 3 முதல் ஏப்ரல் 4 வரை இந்த ஏற்பாடு நடைமுறையில் இருக்கும். தஞ்சாவூர், கொல்லம், ராமேஸ்வரம் ஆகிய இடங்களில் இருந்து வரும் மூன்று ரயில்கள் எழும்பூருக்கு பதில் தாம்பரத்தோடு முடிவடையும். அதேபோல் எழும்பூரில் இருந்து புறப்படும் இந்த மூன்று ரயில்களும் தாம்பரத்தில் இருந்து புறப்படும். மேலும், மும்பை செல்லும் சூப்பர் பாஸ்ட் ரயில் மட்டும் சென்னை பீச் நிலையத்தில் இருந்து காலை 6.50 மணிக்கு புறப்படும்.
அகமதாபாத்-திருச்சி இடையே இயக்கப்படும் வார ஸ்பெஷல் ரயில்கள் வழித்தடம் மாற்றப்பட்டு, சென்னை நிலையங்களை தவிர்த்து ரேணிகுண்டா, திருத்தணி, வேலூர் வழியாக செல்லும். திருத்தணியில் புதிதாக நிறுத்தம் வழங்கப்படும். பயணிகள் தங்கள் ரயில் புறப்படும் நிலையத்தையும் நேரத்தையும் முன்கூட்டியே சரிபார்க்குமாறு ரயில்வே கேட்டுக்கொண்டுள்ளது.

Related Stories: