57வது நினைவு நாள் அண்ணா நினைவிடத்தில் வரும் 3ம் தேதி எடப்பாடி அஞ்சலி

சென்னை: அதிமுக தலைமை கழகம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: அண்ணாவின் 57வது நினைவு நாளான பிப்ரவரி 3ம் தேதி (செவ்வாய்) காலை 10 மணிக்கு, சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா நினைவிடத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மலர்வளையம் வைத்து, மலர் தூவி அஞ்சலி செலுத்த உள்ளார். தொடர்ந்து, தலைமை கழக செயலாளர்கள் மலர் அஞ்சலி செலுத்த உள்ளனர். நிகழ்ச்சியில், மாவட்ட செயலாளர்கள், எம்பி, எம்எல்ஏக்கள், முன்னாள் அமைச்சர்கள், பல்வேறு அமைப்புகளை சேர்ந்த நிர்வாகிகள், தொண்டர்கள் பெருந்திரளாக கலந்துகொள்ள வேண்டும். புதுச்சேரி, கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா, மகாராஷ்டிரா, கேரளா, டெல்லி மற்றும் அந்தமான் உள்ளிட்ட பிற மாநிலங்களிலும், 3ம் தேதி ஆங்காங்கே அண்ணா சிலைக்கு மாலை அணிவித்தும்; ஆங்காங்கே அண்ணா படங்களை வைத்து மலர் அஞ்சலி செலுத்துமாறு கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: