போதையில் போக்குவரத்துக்கு இடையூறு செய்த வாலிபர்

ஓமலூர், ஜன.24: ஓமலூர் பேருந்து நிலைய பகுதியில் அதிகாலை முதலே சட்டவிரோத சந்துக்கடை மூலம் மது விற்பனை நடக்கிறது. இங்கு மதுவை வாங்கி குடித்து விட்டு வாலிபர்கள் தகராறு செய்து மக்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகின்றனர். நேற்று காலை மது குடித்த வாலிபர் ஒருவர், போதையில் சாலையில் அமர்ந்து கொண்டு போக்குவரத்திற்கு இடையூறு செய்து வாகன ஓட்டிகளுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தி வந்தார். இதனால், ஓட்டுநர்கள், அவரை ஓரமாக அப்புறப்படுத்திய பின்னரும், சாலையில் அமர்ந்து போக்குவரத்துக்கு இடையூறு செய்தார். பின்னர், உறவினர்களை வரவழைத்து அவரை போலீசார் அனுப்பி வைத்தனர். அதிகாலை முதல் நடைபெறும் சட்டவிரோத மது விற்பனையை தடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: