பூலாம்பட்டியில் குவிந்த சுற்றுலா பயணிகள்

இடைப்பாடி, ஜன.26: மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்கு 7000 கனஅடி தண்ணீர் திறக்கப்படுகிறது. செக்கானூர் வழியாக பூலாம்பட்டி, நெரிஞ்சிப்பேட்டை நீர்மின் கதவணையில் தண்ணீர் தேக்கப்பட்டு மின்சார உற்பத்தி நடந்து வருகிறது. இதில் சேலம்- ஈரோடு இரு மாவட்டம் இடையே விசைப்படகு போக்குவரத்து நடந்து வருகிறது. நேற்று விடுமுறை தினத்தையொட்டி வெளி மாநிலம் மற்றும் மாவட்டங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் குடும்பம் குடும்பமாக வந்து விசைப்படகில் உற்சாக சவாரி சென்று மகிழ்ந்தனர். விசைப்படகு படித்துறையில் திருவிழா கூட்டம் போல் சுற்றுலா பயணிகள் கூடியிருந்தனர்.

மேலும் இங்குள்ள கைலாசநாதர் கோயில், சிறுவர் பூங்கா, மூலப்பாறை பெருமாள் கோயில், மாட்டுக்காரர் பெருமாள் கோயில், கோயில்பாளையம் பெருமாள் கோயில், கதவணைப்பாலம், சூட்டிங் ஸ்பாட் உள்ளிட்ட பகுதிகளில் மக்கள் கூட்டம் அதிகளவில் காணப்பட்டது. பில்லுக்குறிச்சி கிழக்கு கால்வாயில் தண்ணீர் நிறுத்தப்பட்டதால் தண்ணீர் குறைவாக இருந்த கால்வாயில் துண்டாலும், வேட்டியாலும் வாலிபர்கள் மீன்களை பிடித்து கொண்டு சென்றனர்.

Related Stories: