மேட்டூர், ஜன.24: காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்யும் மழையை பொறுத்து, ஒகேனக்கல் காவிரி மற்றும் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பதும், குறைவதுமாக உள்ளது. ஒகேனக்கல் காவிரியில் நேற்று முன்தினம் 4 ஆயிரம் கனஅடியாக இருந்த நீர்வரத்து, நேற்று காலை விநாடிக்கு 1500 கனஅடியாக சரிந்துள்ளது. அதே சமயம், மேட்டூர் அணைக்கு நேற்று முன்தினம் 11 கனஅடியாக இருந்த நீர்வரத்து, நேற்று காலை விநாடிக்கு 116 கனஅடியாக சற்று அதிகரித்துள்ளது. அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்கு விநாடிக்கு 7,000 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்படுகிறது. அணைக்கு வரும் நீரின் அளவை காட்டிலும், திறப்பு அதிகமாக இருப்பதால் நீர்மட்டம் தொடர்ந்து சரிந்து வருகிறது. நேற்று முன்தினம் 95.67 அடியாக இருந்த அணையின் நீர்மட்டம், நேற்று காலை 97.17 அடியாக சரிந்துள்ளது. நீர் இருப்பு 58.76 டிஎம்சியாக உள்ளது.
