*260 பேர் பங்கேற்பு
ராணிப்பேட்டை : ராணிப்பேட்டை அரசு மேல்நிலைப்பள்ளியில் பள்ளி அளவிலான என்.சி.சி மாணவர்களுக்கான ஏ சான்றிதழ் வழங்கும் தேர்வில் 260 பேர் கலந்துகொண்டனர்.
சென்னை ஏ பிரிவு 10வது பட்டாலியன் வேலூர் சார்பில் தேசிய மாணவர் படை (என்சிசி) ராணிப்பேட்டை செக்டார் மூலமாக பள்ளி அளவில், என்சிசி மாணவர்களுக்கான ஏ சான்றிதழ் வழங்கும் தேர்வு, ராணிப்பேட்டை அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது.
தேர்வுக்கு 10வது பட்டாலியன் லெப்டினல் கர்னல் வெங்கடேஷ் தலைமை தாங்கினார். சுபேதார் ரெட்டி, அவில்தாரர்கள் அருண், சாந்தன், உமேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில், ராணிப்பேட்டை அரசு மேல்நிலைப்பள்ளி, வாலாஜா அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, எஸ்.ஆர்.கே. பெல் மேல்நிலைப்பள்ளி, பொன்னை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, பூட்டுத்தாக்கு மேல்நிலைப்பள்ளி, மேல்விஷராம் மேல்நிலைப்பள்ளி மற்றும் ஆயிலம் அரசு மேல்நிலைப்பள்ளி ஆகிய 7 பள்ளிகளைச் சேர்ந்த 260 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு தேர்வு எழுதினர்.
இதில், அவர்களுக்கு காலையில் செய்முறை தேர்வு மாலையில் எழுதுத்தேர்வும், ஏ சான்றிதழ் பெறுவதற்காக நடைபெற்றது. இத்தேர்வில் துப்பாக்கி சுடுதல், வரைபடம் (மேப்) படித்தல், மார்ச் பாஸ்ட் போன்றவற்றில் மாணவர்கள் கலந்து கொண்டனர்.
இதில் என்சிசி அலுவலர்கள் பால் தெய்வ சிகாமணி, ஜமில் அகமது, பாபு அருள் பிரசாத், பாலமுருகன், கபில்தேவ், மதிவாணன், கணேஷ்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
