செங்கோட்டையன் பேச விஜய் திடீர் தடை

கோபி: கோபியில் உள்ள தவெக கட்சி அலுவலகத்தில் நேற்று முன்னாள் அமைச்சரும், ஒருங்கிணைப்பாளருமான கே.ஏ.செங்கோட்டையன் கூறியதாவது: இரண்டு நாட்களுக்கு செய்தியாளர் சந்திப்பு வேண்டாம் என்று கட்சி தலைமை கூறியிருக்கிறது. சிலவற்றை செய்ய வேண்டி இருப்பதால், 2 நாட்களுக்கு எதையும் கூற வேண்டாம் என்று நினைக்கிறேன் என்றார். அப்போது நிருபர்கள், ‘‘எடப்பாடியுடன் கூட்டணி வைத்தால் தூக்கில் தொங்க வேண்டும் என்று டிடிவி தினகரன் கூறினார். தற்போது பாஜ-அதிமுக கூட்டணியில் இணைந்து உள்ளாரே?’’ என கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த செங்கோட்டையன், ‘‘எடப்பாடியுடன் கூட்டணி வைத்திருப்பது டிடிவி தினகரனின் விருப்பம்’’ என கூறிவிட்டு சென்றுவிட்டார்.

Related Stories: