திருமா அடியாள் இல்லை; பெரியாரின் அடியார்: ஆதவ் அர்ஜூனாவிற்கு காசிமுத்து மாணிக்கம் பதிலடி

சென்னை: கோபிச்செட்டிபாளையம், ஜியான் தியேட்டர் அருகில் ஈரோடு வடக்கு மாவட்ட திமுக மாணவர் அணி சார்பில் திமுக கிருபாகரன் தலைமயில் கூட்டம் நடந்தது. கூட்டத்தில் மாவட்ட செயலாளர் நல்லசிவம். ஏ.ஜி.வெங்கடாஜலம், எம்.எல்.ஏ, வடக்கு மாவட்ட வர்த்தகர் அணி அமைப்பாளர் மகாலிங்கம், மாநில நெசவாளர் அணி செயலாளர் சித்து ரவிச்சந்திரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் திமுக வர்த்தகர் அணி மாநிலச்செயலாளர் காசிமுத்துமாணிக்கம் பேசியதாவது: சுரண்டல் லாட்டரி மூலம் பல்லாயிரம் கோடி ஊழல் செய்து இ.டி.யிடம் மாட்டிக்கொண்டு அபராதம் கட்டி, சிறை வாழ்க்கை முடித்து சசிகலா போல் வழக்கை நேர் செய்யாது, குறுக்கு வழியில் திமுக கூட்டணியை குலைக்கிறேன் என பாஜவிடம் சொல்லிவிட்டு வந்து செயல்படும் ஆதவ், திருமாவை அடியாள் என்று சொன்னால் நாக்கு அழுகிவிடும். திருமா தமிழகத்தின் சிறந்த பேச்சாளர் மட்டுமல்ல சிந்தனையாளர். பெரியார், அம்பேத்கருக்கு பணிபுரியும் அடியார்.

பஞ்சாயத்து தேர்தலில் கூட வெல்லாத நீ பாராளுமன்ற உறுப்பினரை பார்த்து கேட்கலாமா. நீ பாஜவுக்கு ஆதரவாக செயல்படுவது வழக்கிலிருந்து தப்பிக்க, ஆனால் பா.ஜ. கூட்டணிக்கு திருமா சென்றால் கேபினட் அமைச்சராவார். அரசியலில் அகரம் அறியாத நீ, சிகரத்தில் இருக்கும் செந்தில் பாலாஜியின் கால் தூசுக்கு சமம் இல்லாதவன், அஞ்சா நெஞ்சன், இரும்பு மனிதன், கோவை மாநகராட்சியில் 97% வெற்றிக்காக உழைத்த, தளபதியின் வழிகாட்டுதலில் வென்றவர்.

செத்தவர் வீட்டில் சென்று துக்கம் விசாரிக்காமல் செத்தவர்களை ரிசார்ட்டுக்கு அழைத்து துக்கம் விசாரித்த உலகத் தலைவர் நடிகர் விஜய் தான். பெரியார் வாழ்ந்த ஊரில் பிரசார பயணத்தின் போது, கார் பழுதுபட்டால் ரோட்டில் இருக்கும் வாய்க்கால், வடிகால் குட்டி பாலத்தில் தன் நண்பன் அன்பில் பொய்யாமொழியுடன் உறங்கிய எங்கள் முதல்வர் தளபதி எங்கே? டெல்லிக்கு தனி விமானத்தில் ரூ.1 கோடி செலவு செய்து இருமுறை டெல்லி சென்ற விஜய் எங்கே? ஆதவ், கண்டதை திங்காதே, மென்றதை விழுங்காதே அரிதார நடிகர்கள், அவதார புருஷனின் நிழலைக் கூட தொட முடியாது. தரமில்லாமல் பேசாதே, தங்கத்தை உரசிப்பார்க்காதே என ஆதவை எச்சரிக்கிறேன். இவ்வாறு கவிஞர் காசிமுத்துமாணிக்கம் கூறினார்.

Related Stories: