பாஜவுடன் கூட்டணியால் அதிமுக தோல்வி உறுதி: இந்திய கம்யூனிஸ்ட் கணிப்பு

சிவகிரி: பாஜவுடன் கூட்டணி சேர்ந்துள்ளதால் அதிமுகவின் தோல்வி உறுதியாகிவிட்டது என்று இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் வீரபாண்டியன் கூறினார். தென்காசி மாவட்டம், சிவகிரியில் இந்திய கம்யூனிஸ்ட் அலுவலகம் மற்றும் வணிக வளாகம் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. இதனை திறந்து வைத்து இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் வீரபாண்டியன் பேசியதாவது: பாஜ ஆட்சியில் நாடாளுமன்ற ஜனநாயகம் நெருக்கடியில் உள்ளது. சட்டத்தின் ஆட்சியில் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. மிரட்டி கூட்டணிக்கு சேர்க்கிறார்கள்.

தற்போது கூட்டணியில் சேர்ந்தவர்கள் ஒன்றிய அரசின் மிரட்டலால் சேர்ந்துள்ளனர். பிரதமர் உள்ளிட்ட அத்தனை அமைச்சர்கள் தமிழ்நாட்டிற்கு வந்தாலும் திமுக கூட்டணி வெற்றி பெறும். அதிமுக ஜனநாயக கட்சி. அதிமுக தனியாக நின்றால் அதை எதிர்கொள்வது கூட கடினம். ஆனால் பாஜவுடன் கூட்டணி சேர்ந்துள்ளதால் சட்டமன்ற தேர்தலில் அதன் தோல்வி உறுதியாகிவிட்டது. இந்தியாவில் சிறுபான்மை மக்களுக்கு பெரும்பான்மை இந்துகள் தான் பாதுகாப்பு. அதை சிதைக்க பாஜ முயல்கிறது. வெறுப்பு அரசியலை தமிழக மக்கள் என்றும் ஏற்பதில்லை. இவ்வாறு அவர் பேசினார்.

Related Stories: