அடிமை, ஊழல் கட்சி என விமர்சிப்பதா? விஜய்யை கண்டித்து அதிமுகவினர் போஸ்டர்: திருப்புவனத்தில் பரபரப்பு

திருப்புவனம்: மாமல்லபுரத்தில் நேற்று முன்தினம் தவெக செயல்வீரர்கள் கூட்டத்தில் பேசிய விஜய், ‘‘வரும் சட்டமன்றத் தேர்தலில் ஓட்டுப்பதிவு மாலை 5 மணியுடன் முடிந்தாலும், தவெக தொண்டர்கள் 7 மணி வரை விழிப்புடன் இருக்க வேண்டும். இல்லையென்றால், அதிமுகவினர் கள்ளஓட்டு போட்டு விடுவார்கள். அதிமுக ஊழல் கட்சி, பாஜவின் அடிமையாக அதிமுக இருக்கிறது’’ என கடுமையாக விமர்சனம் செய்திருந்தார். அவரது பேச்சுக்கு தமிழகம் முழுவதும் அதிமுகவினர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் பகுதியில் விஜய் பேச்சை கண்டித்து அதிமுக சார்பில் கண்டன போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது. அதில், ‘தவெக தலைவர் விஜய் அவர்களே எச்சரிக்கிறோம். தேர்தலில் கள்ள ஓட்டுபோட்டுத்தான் வெற்றி பெற வேண்டும் என்ற அவசியம் அதிமுகவிற்கு இல்லை’ என்றும், மற்றொரு போஸ்டரில், ‘விஜய் அவர்களே வன்மையாக கண்டிக்கிறோம். அதிமுக என்னும் மாபெரும் இயக்கம் யாருக்கும் அடிமையாக இருந்த சரித்திரம் இல்லை’ என பிரசுரிக்கப்பட்டிருந்தது.

Related Stories: