சீனாவை முந்துகிறது இந்தியா தமிழ்நாட்டில் தொழில் துறை வளர்ச்சி உபி, பீகாரில் மக்கள் தொகை வளர்ச்சி

சீனா எல்லா வகையிலும் இந்தியாவை சீண்டி வருகிறது. பொருளாதாரத்துக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறது. சீன பொருட்களை சார்ந்திருக்கக் கூடாது, இந்தியாவில் உற்பத்தியை அதிகரிக்க வேண்டும் என ஒன்றிய அரசு வலியுறுத்தி வருகிறது. வளர்ச்சியடைந்த இந்தியா இலக்கை நோக்கி முன்னேறும் வகையில் மேக் இன் இந்தியா திட்டத்தையும் அறிவித்தது.

இந்நிலையில், குழந்தை பிறப்பு எண்ணிக்கையில் சீனாவை சத்தமில்லாமல் முந்தி வருகிறது இந்தியா. ஐக்கிய நாடுகள் சபையின் மக்கள்தொகை கணிப்புகளின்படி, 2022ம் ஆண்டின் மத்தியில் இந்தியா சீனாவை முந்தி உலகின் அதிக மக்கள்தொகை கொண்ட நாடாக மாறியது. 2061ம் ஆண்டில் இந்தியாவின் மக்கள்தொகை உச்சத்தை எட்டும் என்று கணிப்பு வெளியிட்டுள்ளது.
சீனாவின் மக்கள்தொகை தொடர்ச்சியாக 4வது ஆண்டாக சரிவை சந்தித்துள்ளது. இதற்கான முக்கிய அறிகுறியாக அந்த நாட்டில் பிறப்பு விகிதம் குறைகிறது. சீனாவின் பிறப்பு விகிதத்தையும் இந்தியாவுடன் ஒப்பிட்டு பார்க்கும்போது, இந்த எண்ணிக்கை உ.பி, பீகார் மாநிலங்கள் மட்டுமே முறியடித்து விட்டன. மக்கள்தொகை சீனாவின் மக்கள் தொகையான 141 கோடியில் இது 26 சதவீதம் மட்டுமே என்றாலும், தற்போது சீனாவின் மொத்த பிறப்பு விகிதத்தை விட அதிகமாக உள்ளது தெரிய வந்துள்ளது.

நடப்பு 2025ம் ஆண்டில் சீனாவில்79.1 கோடி குழந்தைகள் பிறந்ததாக பதிவாகியுள்ளன. இது ஐ.நா.வின் கணிப்புடன் ஒப்பிடுகையில் ஏறக்குறைய 10 லட்சம் மட்டுமே குறைவு. சீனாவின் தேசிய புள்ளியியல் ஆணையம் வெளியிட்ட தரவுகள் இதனை தெரிவிக்கின்றன. இது கடந்த 2024ம் ஆண்டில் பதிவான 95.3 லட்சத்துடன் ஒப்பிடுகையில் 16.2 லட்சம் குறைவு. மேலும் 2024ல் வெளியிடப்பட்ட ஐக்கிய நாடுகள் சபையின் சமீபத்திய 20 ஆண்டு மக்கள்தொகை கணிப்பான 87.1 லட்சத்தை விட 9 சதவீத குறைவு. சமீபத்திய உத்தேச கணிப்பின்படி இந்தியாவின் மக்கள் தொகை 146 கோடியாகவும், சீனாவின் மக்கள் தொகை 142 கோடியாகவும் உள்ளது.

வடமாநிலங்களில் தொழில் வாய்ப்புகள் குறைவு. ஆனால், தமிழ்நாடு தொழில்துறை வளர்ச்சி, முதலீடுகள் பெருக்கம், வேலை வாய்ப்புகள் என துறை தோறும் சாதித்து வருகிறது என்பது ஆதாரப்பூர்வ புள்ளி விவரங்கள் மூலம் தெரிய வந்துள்ளது. ஒன்றிய அரசின் புள்ளி விவரத்திலேயே இது குறிப்பிடப்பட்டுள்ளது. சமீபத்தில் வெளியிடப்பட்ட ரிசர்வ் வங்கி அறிக்கையில் அதில் தமிழ்நாட்டின் மாநில மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிஎஸ்டிபி) 2023-24 ரூ.26.89 லட்சம் கோடியாக இருந்த நிலையில், 2024-25ம் நிதியாண்டில் ரூ.31.18 லட்சம் கோடியாக உயா்ந்து 16 சதவீத வளா்ச்சியை பதிவுசெய்துள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது. இப்படி பொருளாதார வளர்ச்சியில் தமிழ்நாடு முன்னேறிக் கொண்டிருக்க, மக்கள் தொகை வளர்ச்சியில் பாஜ கூட்டணி ஆளும் உபி. பீகார் மாநிலங்கள் சாதித்திருக்கின்றன என்பது தற்போதைய புள்ளி விவரம் மூலம் தெரிய வந்துள்ளது.

நிதி பகிர்வு அதிகரிக்க இதுவும் காரணமா
மாநிலங்களுக்கு ஒன்றிய அரசு நிதி பகிர்வு அளிக்கிறது. இதில் தனிநபர் வருவாய், மாநிலத்தின் பரப்பளவு, காடுகள், வரி வருவாய் போன்றவை கணக்கிடப்படுகிறது. இதில் மக்கள் தொகை மற்றும் பரப்பளவு அடிப்படையில் மட்டும் தலா 15 சதவீதம் வீதம் 30 சதவீத நிதி ஒதுக்கப்படுகிறது என 15வது நிதிக்கமிஷன் பரிந்துரை மூலம் தெரிய வந்துள்ளது.

Related Stories: