தமிழ்நாட்டை சேர்ந்த பத்ம விருதாளர்களுக்கு அமித் ஷா பாராட்டு

புதுடெல்லி: ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா நேற்று எக்ஸ் தளத்தில் தமிழில் வெளியிட்ட பதிவில், ‘‘ பத்மஸ்ரீ விருது பெற்ற தமிழகத்தை சேர்ந்தவர்களுக்கு பாராட்டுகள். காயத்ரி பாலசுப்ரமணியன், ரஞ்சனி பாலசுப்ரமணியன், ஓதுவார் திருத்தணி சுவாமிநாதன், ஆர்.கிருஷ்ணன் ராஜாஸ்தபதி காளியப்ப கவுண்டர், திருவாரூர் பக்தவத்சலம், சிவசங்கரி மற்றும் கே.விஜய் குமார் ஆகியோரின் பங்களிப்புகள் வரும் தலைமுறை இந்தியர்களுக்கு சிறந்த ஊக்கமளிப்பதாக அமையும்’’ என கூறி உள்ளார்.

Related Stories: