யமுனையை சுத்தப்படுத்த முனக், கங்கை நீரை திருப்பிவிட வேண்டும்: அரியானா, உ.பி.க்கு ஒன்றிய அரசு உத்தரவு

புதுடெல்லி: யமுனை நதிக்கு புத்துயிர் அளிப்பது தொடர்பான ஆலோசனை கூட்டம் டெல்லியில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், யமுனை நதியில் கலக்கும் அரியானா, உத்தரப்பிரதேசம் மற்றும் டெல்லியில் உள்ள அனைத்து வடிகால்களையும் தணிக்கை செய்வதற்கு மூன்றாம் தரப்பு நிறுவனத்தை நியமிப்பதற்கு முடிவு செய்யப்பட்டது. மேலும் யமுனையின் நீர்ப்பிடிப்பு பகுதியில் சுற்றுச்சூழல் நீரோட்டத்தை அதிகரிப்பதற்கு மேல் கங்கை கால்வாயில்(உத்தரப்பிரதேசம்) இருந்து கிட்டதட்ட 800 கன அடி நீரை நேரடியாக வஜிராபாத் தடுப்பணைக்கு திருப்பி விடுவது, முனக் கால்வாய்(அரியானா) இருந்து 100 கனஅடி நீரை நேரடியாக ஆற்றில் சேர்க்க ஒன்றிய அரசு உத்தரவிட்டது. பதற்கு இலக்கு நிர்ணயிக்கும் திட்டங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.

Related Stories: