இந்தியா-ஐரோப்பிய யூனியன் இடையே தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் குறித்து இன்று அறிவிப்பு

புதுடெல்லி: இந்தியா -ஐரோப்பிய யூனியன் இடையே தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் தொடர்பான முக்கிய அறிவிப்பு இன்று வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. இந்தியா-ஐரோப்பிய யூனியன் இடையே கடந்த 2007ம் ஆண்டு தடையற்ற வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தை தொடங்கியது. ஆனால் பல்வேறு வேறுபாடு காரணமாக 2013ம் ஆண்டு இந்த பேச்சுவார்த்தை நிறுத்தப்பட்டது. 2022ம் ஆண்டு இந்த பேச்சுவார்த்தை மீண்டும் தொடங்கியது.

இந்நிலையில் இந்தியா-ஐரோப்பிய ஒன்றிய உச்சிமாநாடு தொடர்பான பேச்சுவார்த்தை இன்று நடைபெறுகின்றது. இதில் பிரதமர் மோடி, ஐரோப்பிய ஆணைய தலைவர் உர்சுலா வான் டெர் லேயன் மற்றும் ஐரோப்பிய கவுன்சில் தலைவர் அன்டனியோ கோஸ்டா ஆகியோர் பங்கேற்கின்றனர். முன்னதாக ஐரோப்பிய ஆணைய தலைவர் உர்சுலா வான் டெர் லேயன் மற்றும் ஐரோப்பிய கவுன்சில் தலைவர் அன்டனியோ கோஸ்டா ஆகியோர் நேற்று இந்தியாவின் 77வது தின குடியரசு தின கொண்டாட்டங்களில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர்.

இதனைத்தொடர்ந்து இன்று இந்திய-ஐரோப்பிய யூனியன் உச்சிமாநாடு குறித்த பேச்சுவார்த்தை நடைபெறுகின்றது. இதில் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் குறித்த பேச்சுவார்த்தைகளின் முடிவு மற்றும் மூலோபாய பாதுகாப்பு ஒப்பந்தம் , போக்குவரத்து கட்டமைப்பு ஆகியவை இறுதி செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

Related Stories: