லா லிகா கால்பந்து; டாப் கியரில் ஆடி மாட்ரிட் அமர்க்களம்

வில்லா ரியல்: லா லிகா கால்பந்து போட்டியில் நேற்று, எம்பாபேவின் அபார ஆட்டத்தால் ரியல் மாட்ரிட் அணி 2-0 என்ற கோல் கணக்கில் வில்லா ரியல் அணியை வெற்றி கண்டது. ஸ்பெயினில் முன்னணி வகிக்கும் 38 அணிகள் மோதும் லா லிகா கால்பந்து போட்டிகள் நடந்து வருகின்றன. வில்லா ரியல் நகரில் நேற்று நடந்த போட்டியில் ரியல் மாட்ரிட் – வில்லா ரியல் அணிகள் மோதின.

போட்டியின் துவக்கம் முதல் பம்பரமாய் சுழன்றாடிய ரியல் மாட்ரிட் அணியினர், பெரும்பாலான நேரம் பந்தை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்து கோல் போடுவதில் முனைப்பு காட்டினர். போட்டியின் 47வது நிமிடத்தில் ரியல் மாட்ரிட் அணியின் நட்சத்திர வீரர் கைலியன் எம்பாபே தனது அணிக்காக முதல் கோலை அட்டகாசமாக அடித்து கரவொலி பெற்றார். அந்த அணி முன்னிலை பெற்ற நிலையில் அடுத்த கோலை யார் போடுவார் என்பது தெரியாமல் விறுவிறுப்பாக போட்டி நடந்தது.

போட்டியின் கடைசி கட்டம் வரை கோல் விழாத சமயத்தில் 90+4வது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி கார்னர் வாய்ப்பை எம்பாபே அற்புதமாக பயன்படுத்தி 2வது கோல் அடித்து அசத்தினார். அதனால் 2-0 என்ற கோல் கணக்கில் அந்த அணி அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியை அடுத்து புள்ளிப் பட்டியலில் 51 புள்ளிகளுடன் ரியல் மாட்ரிட் முதலிடம் பிடித்தது. பார்சிலோனா அணி 49 புள்ளிகளுடன் 2ம் இடத்தில் உள்ளது.

Related Stories: