எஸ்ஏ டி20 தொடர் 3வது முறை மகுடம் சூடும் முனைப்பில் சன் ரைசர்ஸ்

கேப்டவுன்: தென் ஆப்ரிக்காவில் 4வது சீசன் எஸ்ஏ டி20 தொடர் நடந்து வருகிறது. குவாலிபயர் 2வது சுற்றில் பார்ல் ராயல்ஸ், சன் ரைசர்ஸ் அணிகள் மோதின. முதலில் விளையாடிய பார்ல் ராயல்ஸ் அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 114 ரன்கள் மட்டுமே எடுத்தது. அடுத்து விளையாடிய சன் ரைசர்ஸ் அணி 11.4 ஓவரில் 3 விக்கெட்டை மட்டும் இழந்து 117 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று தொடர்ந்து 4வது முறையாக பைனலுக்கு சென்று வரலாற்று சாதனை படைத்துள்ளது.

எஸ்ஐ டி20 தொடர் முதல் 2 சீசனில் சன் ரைசர்ஸ் அணி கோப்பையை கைப்பற்றிய நிலையில் 3வது சீசனில் பைனலுக்கு சென்று ரன்னர் அப் ஆனது. இன்று கேப்டவுனில் நடக்கும் இறுதிப் போட்டியில் ஸ்டப்ஸ் தலைமையிலான சன் ரைசர்ஸ் அணியும், கேசவ் மகாராஜ் தலைமையிலான பிரிட்டோரியா கேப்பிடல்ஸ் அணியும் களம் காண்கின்றன.

சன் ரைசர்ஸ் அணி பேட்டிங்கில் டி காக், பேர்ஸ்டோ, ஸ்டப்ஸ், பிரிட்ஜ்க் ஆகியோர் சரவெடியாய் வெளுத்து வாங்கி வருகின்றனர். பவுலிங்கில் ஜான்சன், நாட்ரிஜ், முத்துசாமி, க்ரீன் ஆகியோர் விக்கெட் டேக்கராக இருந்து வருகின்றனர். குவாலியர் 1ல் பிரிட்டோரியா கேப்பிடல்ஸ் அணியுடன் தோற்ற சன் ரைசர்ஸ் அதற்குப் பதிலடியாக பைனலில் வீழ்த்தி 3வது முறையாக எஸ்ஏ டி20 தொடர் கோப்பையை கைப்பற்றும் என்ற எதிர்பார்ப்பு இருந்து வருகிறது.

Related Stories: