கேப்டவுன்: இந்தியாவில் ஐபிஎல் போன்று தென்ஆப்ரிக்காவில் எஸ்ஏ 20 தொடர் நடத்தப்படுகிறது. இதில் 4வது சீசனில் கேப்டவுனில் இன்று இரவு 7 மணிக்கு தொடங்கி நடைபெறும் பைனலில் சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப்-பிரிட்டோரியா கேபிட்டல்ஸ் மோதுகின்றன. குவாலிபயர் 1ல் தோல்வியை சந்தித்த சன்ரைசர்ஸ் இன்று அதற்கு பழிதீர்த்து கோப்பையை 3வது முறையாக வெல்லும் முனைப்பில் உள்ளது. டிரிஸ்டன் ஸ்டப்ஸ் தலைமையிலான அணியில் டிகாக், பேர்ஸ்டோவ், மேத்யூ பிரீட்ஸ்கே, மார்கோ ஜான்சன், நார்ட்ஜே உள்ளிட்ட முன்னணி வீரர்கள் உள்ளனர்.
மறுபுறம் இந்தியா முன்னாள் கேப்டன் கங்குலியை பயிற்சியாளராக கொண்ட கேபிட்டல்ஸ் முதன்முறையாக கோப்பையை முத்தமிடும் ஆசையில் உள்ளது. கேப்டன் மகராஜ் தலைமையிலான அணியில் பிரெவிஸ், ஷாய் ஹோப், ரூதர்போர்ட், லுங்கிநிகிடி உள்ளிட்டோர் உள்ளனர். பட்டம் வெல்லும் அணிக்கு இந்திய மதிப்பில் ரூ.18.50 கோடி பரிசு கிடைக்கும். ஐபிஎல்லுக்கு பின் லீக் தொடர்களில் 2வது அதிக பரிசு தொகை இதுதான்.
