பெர்த்: ஆஸ்திரேலியாவில் 15வது தொடர் பிக்-பாஷ் டி20 போட்டி நடந்து வருகிறது. நேற்றைய சேலஞ்சர் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் ஹோபர்ட் ஹரிகேன்ஸ், சிட்னி சிக்சர்ஸ் அணிகள் மோதின. முதலில் விளையாடிய சிட்னி சிக்சர்ஸ் 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 198 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக ஸ்மித் 65 ரன்கள் எடுத்தார்.
அடுத்து விளையாடிய ஹோபர்ட் ஹரிகேன்ஸ் அணி 17.2 ஓவரில் 141 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதன்மூலம் சிட்னி சிக்சர்ஸ் அணி 57 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று பைனலுக்குள் நுழைந்தது. இன்று பெர்த்தில் நடக்கும் இறுதி போட்டியில் டேனர் தலைமையிலான பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் அணியும், ஹென்ட்ரிக்ஸ் தலைமையிலான சிட்னி சிக்சர்ஸ் அணியும் களம் காணவுள்ளன.
இதுவரை 8 முறை பைனலில் நுழைந்த பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் அணி 5 முறையும், 7 முறை பைனலில் நுழைந்த சிட்னி சிக்சர்ஸ் அணி 3 முறை கோப்பையை முத்தமிட்டுள்ளனர். இரு அணி வீரர்களும் நல்ல பார்மில் இருப்பதால் இன்றைய இறுதி போட்டியில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது.
