களமிறங்க தயாராகும் தல

ராஞ்சி: ஐபிஎல் சீசனில் விளையாட தயாரான எம்.எஸ்.தோனி தீவிர வலைப்பயிற்சியை துவங்கியுள்ளார். அந்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. நடப்பாண்டு ஐ.பி.எல். சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, முன்னாள் கேப்டன் எம்.எஸ்.தோனியை ரூ.4 கோடிக்கு அணியில் தக்க வைத்தது. இதன்மூலம் இந்த சீசனிலும் தோனி விளையாட உள்ளார்.

கடந்த சீசனைப் போலவே இந்த ஆண்டும் அணியின் கேப்டனாக ருதுராஜ் நியமிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், மார்ச் இறுதியில் ஐபிஎல் தொடர் தொடங்கவுள்ள நிலையில், எம்.எஸ்.தோனி தற்போது அதற்கான பயிற்சியை தொடங்கியுள்ளார். எம்.எஸ்.தோனி பயிற்சியில் ஈடுபட்டு வரும் வீடியோவை ஜார்க்கண்ட் கிரிக்கெட் அசோசியேசன் வெளியிட்டுள்ளது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.

Related Stories: