இந்தோனேஷியா பேட்மின்டன் அரையிறுதி வாய்ப்பை தவறவிட்ட பி.வி.சிந்து

ஜகார்தா: இந்தோனேஷியா மாஸ்டர்ஸ் பேட்மின்டன் காலிறுதிப் போட்டியில் நேற்று, இந்திய நட்சத்திர வீராங்கனை பி.வி.சிந்து, சீன வீராங்கனை சென் யுபெய்யிடம் தோல்வி அடைந்தார். இந்தோனேஷியாவின் ஜகார்தா நகரில் இந்தோனேஷியா மாஸ்டர்ஸ் பேட்மின்டன் போட்டிகள் நடந்து வருகின்றன. நேற்று நடந்த காலிறுதிப் போட்டியில் இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை பி.வி.சிந்து, சீன வீராங்கனை சென் யுபெய் உடன் மோதினார்.

போட்டியின் துவக்கம் முதல் நேர்த்தியாக அட்டகாசமாக ஆடிய சென், 21-13 என்ற புள்ளிக் கணக்கில் முதல் செட்டை எளிதில் கைப்பற்றினார். தொடர்ந்து நடந்த 2வது செட்டிலும் அவரது ஆதிக்கமே காணப்பட்டது. 21-17 என்ற புள்ளிக் கணக்கில் அந்த செட்டை வசப்படுத்திய அவர் 2-0 என்ற நேர் செட்களில் வென்று அரை இறுதிக்கு முன்னேறினார்.

மற்றொரு போட்டியில் தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட மலேசிய வீராங்கனை லெட்சணா கருப்பதேவன், தைவான் வீராங்கனை ஒய் ஹுவாங்கை எதிர்கொண்டார். இப்போட்டியில் அற்புத ஆட்டத்தை வெளிப்படுத்திய லெட்சணா, 21-17, 21-18 என்ற நேர் செட்களில் வென்று அரை இறுதிக்கு முன்னேறினார்.

* போராடி வீழ்ந்தார் சென்
ஆடவர் ஒற்றையர் காலிறுதிப் போட்டியில் நேற்று, இந்திய வீரர் லக்சயா சென், தாய்லாந்தின் பக்காபோன் தீராராட்சகுல் உடன் மோதினார். துவக்கம் முதல் இரு வீரர்களும் புள்ளிகளை எடுப்தில் முனைப்பு காட்டி ஆக்ரோஷமாக ஆடினர். இருப்பினும், 21-18, 22-20 என்ற நேர் செட் கணக்கில் தாய்லாந்து வீரர் சிறப்பான வெற்றியை பதிவு செய்து அரையிறுதிக்குள் நுழைந்தார்.

Related Stories: