முதல்வர் மு.க.ஸ்டாலின் சட்டமன்றப் பேரவையில், ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்திற்கு பதிலளித்து நேற்று உரையாற்றினார். அப்போது அவர் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார். ஆளுநர் மாளிகை கேட்ட கேள்விகளுக்கும் விளக்கமாக பதில் அளித்தார். முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது பதில் உரையை காலை 9.36 மணிக்கு படிக்க ஆரம்பித்தார்.
தொடர்ந்து அவர் 10.10 மணி வரை உரையாற்றினார். மொத்தம் 34 நிமிடம் முதல்வர் உரையாற்றினார்.
முதல்வர் மு.க.ஸ்டாலின் ஒவ்வொரு அறிவிப்பை வெளியிடும் போதும், திமுக அரசு சாதனைகள் குறித்து பேசும்போதும் ஆளுங்கட்சி எம்எல்ஏக்கள் மற்றும் கூட்டணி கட்சி எம்எல்ஏக்கள் மேஜையை தட்டி முதல்வருக்கு நன்றியை தெரிவித்தனர்.
உரையை படித்து முடித்ததும் அருகில் இருந்த அமைச்சர்கள் முதல்வரிடம் உரை ஃபர்ஸ்ட் கிளாஸ் ஆக இருந்ததாக வாழ்த்து தெரிவித்தனர். துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினும் முதல்வரிடத்தில் பதிலுரை மற்றும் அருமையாக இருந்ததாக தெரிவித்தார். அதை முதல்வர் சிரித்துக்கொண்டே கேட்டார்.
