நாகப்பட்டினம், ஜன. 22: நாகூர் அருகே கீழவாஞ்சூர் மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளில் தபால்கள் தாமதமின்றி கிடைக்க அஞ்சல் குறியீட்டு எண் பயன்படுத்த வேண்டும் என நாகப்பட்டினம் அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் சத்தியராஜா தெரிவித்துள்ளார்.
நாகப்பட்டினம் அஞ்சல் கோட்டத்தில் உள்ள நாகூர் துணை அஞ்சலகத்தின் கீழ் இயங்கும் மேலவாஞ்சூர் கிளை அஞ்சலகத்தின் பட்டுவாடா பகுதிகளான கீழவாஞ்சூர் அதன் சுற்று பகுதிகளான விசாலாட்சி சோப் கம்பெனி, கெம்ப்ளாஸ்ட் கம்பெனி, கண்ணப்பன் அயர்ன் ஸ்டீல் கம்பெனி, ஸ்ரீ ரங்கராஜ் ஸ்டீல்ஸ், மகாலட்சுமி ஸ்கூல், ஆசாரி தெரு, சையது அலிஷா தெரு, காரைக்கால் மெயின் ரோடு, மாதா கோவில் தெரு மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளுக்கு வரும் தபால்கள் அனைத்திற்க்கும் 611 002 என்ற அஞ்சல் குறியீட்டு எண் பயன்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
