குடியரசு தினத்தை முன்னிட்டு அஞ்சலகங்களில் தேசிய கொடி விற்பனை

திருப்பூர், ஜன.22: நாடு முழுவதும் வரும் ஜனவரி 26ம் தேதி குடியரசு தின விழா கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு, மத்திய அரசின் இல்லந்தோறும் மூவர்ண கொடி திட்டத்தின் கீழ் பொதுமக்கள் தங்கள் வீடுகளில் தேசியக் கொடியை ஏற்றி மரியாதை செலுத்துவதை ஊக்குவிக்க அஞ்சல் துறை மூலம் கொடிகள் விற்பனை செய்யப்படுகின்றன.

திருப்பூர் அஞ்சல் கோட்டத்திற்கு உட்பட்ட திருப்பூர் தலைமை அஞ்சலகம், அவிநாசி, பல்லடம், காங்கேயம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள அனைத்து துணை மற்றும் கிளை அஞ்சலகங்களிலும் தேசியக் கொடி விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது. தரமான தேசியக் கொடிகள் தலா 25 ரூபாய் என பொதுமக்களுக்கு வழங்கப்படுகின்றன. இதற்காக திருப்பூர் கோட்டத்திலுள்ள அஞ்சல் அலுவலகங்களில் தேசிய கொடிகள் இருப்பு வைக்கப்பட்டுள்ளன.

 

Related Stories: