தேவதானப்பட்டி, ஜன.22: பெரியகுளம் அரசு தோட்டக்கலை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. சென்னை போரா நிறுவனத்தின் நிறுவனர் ஹரிணி பாலச்சந்திரன் கலந்துகொண்டு, `பிளாஸ்டிக்கை அகற்று – இயற்கையை நேசி’ எனும் தலைப்பில் பேசினார்.
இயற்கை முறையில் தயாரிக்கப்பட்ட பொருட்களை பயன்படுத்தினால் சுற்றுச்சூழல் பாதிப்பு தவிர்க்கப்படும் என்றார். முன்னதாக வனவியல் பேராசிரியர் ராதாகிருஷ்ணன் வரவேற்று பேசினார். முகாமில் கல்லூரியின் முதலாம் ஆண்டு மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை பேராசிரியர் வெங்கடேசன், உடற்கல்வி இயக்குனர் பார்த்திபன் ஆகியோர் செய்திருந்தனர்.
