இரட்டை மாட்டுவண்டி எல்கை பந்தயம்

திருப்புத்தூர், ஜன.22: திருப்புத்தூர் அருகே இரட்டை மாட்டு வண்டி பந்தயத்தில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. திருப்புத்தூர் அருகே கே.ஆத்தங்குடியில் தை மாதம் கிராம தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேக தீபாராதனை முன்னிட்டு இரட்டை மாட்டு வண்டி எல்கைப் பந்தயம் நேற்று நடைபெற்றது. கே.ஆத்தங்குடி – விராமதி சாலையில் நடைபெற்ற இப்போட்டியில் பெரிய மாடு, சின்ன மாடு என இரு பிரிவுகளாக போட்டி நடைபெற்றது.

பெரிய மாடு பிரிவில் 7 ஜோடிகளும், சின்னமாடு பிரிவில் 12 ஜோடிகளும் என மொத்தம் 19 ஜோடிகள் பங்கேற்றன. இதில் பெரியமாட்டிற்கு 8 கிலோ மீட்டர் தூரமும், சின்னமாட்டிற்கு 6 கிலோ மீட்டர் தூரமும் எல்கையாக நிர்ணயிக்கப்பட்டது. போட்டிகளில் வெற்றி பெற்ற மாடுகளுக்கு வேட்டி துண்டு மாலை அணிவித்து மரியாதை செய்தும், மாட்டின் உரிமையாளர்களுக்கும், சாரதிகளுக்கும் ரொக்கப் பரிசு மற்றும் கோப்பை வழங்கப்பட்டது.

 

Related Stories: