கூட்டுறவுத்துறை சார்பில் சார்நிலை அலுவலர்களுக்கு புத்தாக்க பயிற்சி முகாம்

மதுரை, ஜன. 22: மதுரை மண்டல கூட்டுறவுத்துறை சார் நிலை அலுவலர்களுக்கான புத்தாக்க பயிற்சி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் தலைமையகத்தில் உள்ள அழகப்பன் அரங்கில் நடைபெற்றது. இதனை மதுரை மண்டல இணைப்பதிவாளர் சு.சதீஷ்குமார் தலைமையேற்று துவக்கி வைத்தார். இந்த புத்தாக்க பயிற்சியில் மதுரை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி இணைப்பதிவாளர் மற்றும் மேலாண் இயக்குநர் க.வாஞ்சிநாதன் முன்னிலை வகித்தார்.

இதில் துணைப்பதிவாளர் மற்றும் பணியாளர் அலுவலர் கா.பாலசுப்பிரமணியன், மதுரை சரக துணைப்பதிவாளர் இ.காயத்ரி, உசிலம்பட்டி சரக துணைப்பதிவாளர் வீ.கண்ணம்மாள், துணைப்பதிவாளர் பொது விநியோகத் திட்டம் து.ஆசைத்தம்பி, பாண்டியநாடு கூட்டுறவு மேலாண்மை பயிற்சி நிலைய துணைப்பதிவாளர் மற்றும் முதல்வர் கே.வசந்தி, தமிழ்நாடு கூட்டுறவு விற்பனை இணைய துணைப்பதிவாளர் மற்றும் மண்டல மேலாளர் க.சுஜாதா மற்றும் கூட்டுறவு சார்பதிவாளர்கள், முதுநிலை ஆய்வாளர்கள், இளநிலை ஆய்வாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

 

Related Stories: