மதுரை, ஜன. 22: மதுரை மாவட்டத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நாளை (ஜன.23) நடக்கிறது.
மதுரை மாவட்ட விவசாயிகளின் குறைகளைத் தீர்க்கும் வகையில் ஒவ்வொரு மாதமும் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்று வருகிறது. இதன்படி ஜனவரி மாதத்திற்கான மதுரை மாவட்ட விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம், மதுரையில் உள்ள கலெக்டர் அலுவலகத்தில் நாளை (ஜன.23) நடக்கிறது.
இந்த கூட்டத்திற்கு கலெக்டர் பிரவீன்குமார் தலைமை தாங்கி விவசாயிகளின் பிரச்னைகள் குறித்து நேரில் கேட்டறிகிறார். இதன்படி நாளை காலை 10 மணிக்கு கலெக்டர் அலுவலகத்தில் நடைபெறும் இக்கூட்டத்தில் விவசாயம் தொடர்புடைய அனைத்து துறை அலுவலர்களும் கலந்து கொள்கிறார்கள். எனவே விவசாயிகள் அனைவரும் இந்த கூட்டத்தில் பங்கேற்று தங்கள் கோரிக்கைகள் குறித்து நேரடியாக மனுக்கள் வழங்கலாம் என்று, மாவட்ட நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
