மலைப்பாதையில் பயணிக்கும் அரசு பஸ் டிரைவர், கண்டக்டர்களுக்கு விழிப்புணர்வு

மேட்டுப்பாளையம், ஜன.22: தேசிய சாலைப்பாதுகாப்பு மாதத்தை முன்னிட்டு இமயம் சாலைகள் பாதுகாப்பு சங்கம் சார்பில் மலைப்பாதைகளில் பேருந்துகளை இயக்கும் அரசு பேருந்துகளின் டிரைவர்கள் மற்றும் கண்டக்டர்களுக்கு சாலை பாதுகாப்பு மற்றும் விபத்து தடுப்பு குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று மேட்டுப்பாளையம் பேருந்து நிலையத்தில் போக்குவரத்துக்கழக கிளை மேலாளர் பிரகாஷ் தலைமையில் நடைபெற்றது.

அப்போது, மது அருந்தி விட்டு வாகனங்களை இயக்க கூடாது. வாகனங்களை மெதுவாக இயக்க வேண்டும். மலைப்பாதைகளில் மேலே ஏறி வரும் வாகனங்களுக்கு வழி கொடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு சாலைப்பாதுகாப்பு குறித்த வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டன.

மேலும், உறுதிமொழியும் ஏற்றுக்கொள்ளப்பட்டு விழிப்புணர்வு நோட்டீஸ்களும் வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சியில் மாவட்ட தலைவர்கள் லெனின் சக்கரவர்த்தி (கோவை), ஜார்ஜ் (நீலகிரி), அமைப்பு சாரா ஓட்டுநர் சங்க துணை அமைப்பாளர் சிராஜுதீன், செந்தில், குட்டி ஜான் மற்றும் அரசு பேருந்தின் டிரைவர்கள், கண்டக்டர்கள் பங்கேற்றனர்.

 

Related Stories: