குடியரசு தின விழாவையொட்டி மாநில விளையாட்டு போட்டி

மதுரை, ஜன. 22: மதுரையில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் குடியரசு தின விழாவை முன்னிட்டு, மாநில அளவிலான விளையாட்டு போட்டிகள் இன்று (ஜன.22) முதல் 25ம் தேதி வரை நடக்கிறது. பள்ளிக்கல்வித்துறை சார்பில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு ஆண்டுதோறும் குடியரசு தின மற்றும் பாரதியார் தின விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்படுகிறது. அதன்படி, மதுரையில் 14, 17, 19 வயதுப் பிரிவுகளில் மாநில அளவிளான டேக்வாண்டோ, ஸ்குவாஷ் போன்ற புதிய விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்படுகிறது. இப்போட்டிகள் மதுரையில் இன்று முதல் வரும் 25ம் தேதி வரை நடைபெறுகிறது.

மதுரை, அவனியாபுரத்திலுள்ள சேர்மத்தாய் வாசன் மகளிர் கல்லூரியில் இன்றும், நாளையும் மாநில அளவிலான டேக்வாண்டோ போட்டிகளும், அரவிந்த் மீரா பள்ளியில் 24, 25 தேதிகளில் ஸ்குவாஷ் விளையாட்டுப் போட்டியும் நடைபெறுகிறது. தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களில் இருந்தும் டேக்வாண்டா போட்டியில் 1326 மாணவர்களும், 1365 மாணவியர்களும் பங்கேற்கின்றனர். இதேபோல் ஸ்குவாஷ் போட்டியில் 351 மாணவர்கள், 351 மாணவிகளும் கலந்துகாௌ்கின்றனர்.

 

Related Stories: