தேனாம்பேட்டை முதல் சைதாப்பேட்டை வரையிலான உயர்மட்ட பாலம் அமைக்கும் பணிகள் வரும் மே மாதத்திற்குள் முடிவடையும்: நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தகவல்

சென்னை: தேனாம்பேட்டை முதல் சைதாப்பேட்டை வரையிலான உயர் மட்ட பாலம் அமைக்கும் பணி மே மாதத்திற்குள் முடிவடையும் என்று நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர். சென்னை, அண்ணா சாலையில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில் நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் தேனாம்பேட்டை முதல் சைதாப்பேட்டை வரையிலான உயர்மட்டச் சாலை திட்டத்தின் முக்கிய மைல்கல்லான, முதல் தளம் அமைக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது. இது தற்போது செயல்பாட்டில் உள்ள சென்னை மெட்ரோ ரயில் சுரங்கப்பாதையின் மேலாக, நேரடியாக கட்டப்படும் உலகின் முதல் பாலம் ஆகும்.

சுரங்கப்பாதை மெட்ரோ ரயில் போக்குவரத்து வெற்றிகரமாக இயங்கிக் கொண்டிருக்கும் நிலையில், அதன் கட்டுமானத்தின் மேலாகவே, புதிய உயர்மட்ட சாலை உருவாக்கப்படுவது இத்திட்டத்தின் முக்கிய அம்சமாக பார்க்கப்படுகிறது. மேலும் தேனாம்பேட்டை முதல் சைதாப்பேட்டை வரையிலான உயர்மட்டச் சாலை திட்டப் பணிகள் நிறைவடைந்த பின்னர் இரண்டாம் கட்டமாக அண்ணா சாலை வழித்தடத்தில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையிலும், குறைவான நேரத்தில் விரைவான பயண வசதி மேம்படுத்தப்படும். இந்த மேம்பால பணி வரும் மே மாதத்திற்குள் முடிவடையும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதன் மூலம் தேனாம்பேட்டை, தியாகராய நகர், சைதாப்பேட்டை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளுக்கிடையேயான போக்குவரத்து நெரிசல் இல்லாமல் பள்ளி, கல்லூரிகள், அரசு மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு செல்பவர்கள் விரைவாக செல்ல முடியும்.

Related Stories: