நாகையில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி

நாகப்பட்டினம், ஜன. 21: நாகையில் நடைபெற்ற சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணியில் நெடுஞ்சாலைத்துறை சாலைப்பணியாளர்கள் கலந்து கொண்டனர். நாகப்பட்டினம் நெடுஞ்சாலைதுறை சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி நாகப்பட்டினத்தில் நடந்தது.நாகப்பட்டினம் அவுரித்திடலில் இருந்து விழிப்புணர்வு பேரணியை கோட்டப் பொறியாளர் ராஜேஷ்கண்ணா தொடங்கி வைத்தார். பேரணி பப்ளிக் ஆபிஸ் சாலை வழியாக சென்று வட்டார போக்குவரத்து அலுவலக வளாகத்தை அடைந்தது. பேரணியில் கலந்து கொண்ட சாலைப்பணியாளர்கள் தலைக்கவசம் உயிர் கவசம், சாலை பாதுகாப்பு சமூகத்தின் கூட்டுப் பொறுப்பு, விழிப்புடன் பயணம் விபத்தில்லா பயணம், செல்போன் பேசிக்கொண்டு வாகனங்களை இயக்கக்கூடாது. கவனமாக ஓட்டுவோம் காலமெல்லாம் வாழ்வோம். சாலை விதிகளை மதித்தால் விபத்தில்லாமல் பயணம் செய்யலாம். சிக்னலை மதிப்போம் சிக்கலை தவிர்ப்போம் என்பது உள்ளிட்ட வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்திச் சென்றனர். விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்களை விநியோகம் செய்தனர். உதவி கோட்டப் பொறியாளர் அய்யாத்துரை, உதவி பொறியாளர்கள் சிவசுந்தரன், முருகானந்தம், உமாமகேஸ்வரி, சாலை பணியாளர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: