வல்லம், ஜன.21: தஞ்சாவூர் அருகே கத்தரிநத்தம் கிராமத்தில் நெல் சாகுபடி விவசாயிகளுக்கு எலிகளால் ஏற்படும் பாதிப்புகள், அதை கட்டுப்படுத்தும் வழிமுறைகள் குறித்து ஈச்சங்கோட்டை டாக்டர்.எம்.எஸ்.சுவாமிநாதன் வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய மாணவர்கள் செயல் விளக்கம் அளித்தனர். தஞ்சாவூர் அருகே கத்தரிநத்தம் கிராமத்தில் ஈச்சங்கோட்டை டாக்டர்.எம்.எஸ். சுவாமிநாதன் வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய மாணவர்கள் அர்ஜுன், அஸ்வின் குமார், ஆஷ்லின், அரவிந்தன், ஆதில், பெனி தேவராஜா, அபிமித்ரன், தரணித், ஆல்வின், அப்பாஸ் அலி (லடாக்), ஆதர்ஷ் குமார் ( பீகார்), ஆதர்ஷ் குமார் சவுத்ரி (மேற்கு வங்கம்), ஷ்ரவன் குமார் (தெலுங்கானா) ஊரக வேளாண் பணி அனுபவம் பெறும் திட்டத்தின் கீழ் தஞ்சாவூர் வில் பொறி (எலி கிட்டி) பற்றிய செயல்முறை விளக்கம் அளித்தனர். மேலும் அங்குள்ள நெல் விவசாயிகளுக்கு எலிகளால் ஏற்படும் பாதிப்புகளையும் அதை கட்டுப்படுத்தும் வழிமுறைகளையும் விளக்கினர். பிறகு அங்குள்ள விவசாயிகளுக்கு எலி தொல்லை அதிகமாக இருப்பதால் மாணவர்கள் தாங்களாகவே தயாரித்த தஞ்சாவூர் வில் பொறியை வழங்கி விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.
நெல் சாகுபடி விவசாயிகளுக்கு எலிகளால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து செயல் விளக்கம்
- வல்லம்
- எம்.எஸ்.சுவாமிநாதன் வேளாண்மைக் கல்லூரி
- ஆராய்ச்சி நிறுவனம்
- ஈச்சங்கோட்டை
- கத்தரிநாதம்
- தஞ்சாவூர்
- தஞ்சாவூர்...
