சென்னை: குடியரசு நாளையொட்டி ஆளுநர் அளிக்கவுள்ள வழக்கமான தேநீர் விருந்தில் விசிக இந்த ஆண்டும் பங்கேற்காது என அக்கட்சி தலைவர் திருமாவளவன் அறிவித்துள்ளார். சட்டமன்றத்தில் ஆளுநர் தனது கடமையை ஆற்றாமல் அவையிலிருந்து வெளியேறியிருப்பது அவரது வாடிக்கையான அணுகுமுறைதான். இதில் அதிர்ச்சியடைவதற்கு ஒன்றுமில்லை. திராவிடக் கருத்தியலுக்கு எதிரான ‘ஒவ்வாமையின்’ வெளிப்பாடு தான் ஆளுநரின் இத்தகைய செயல். இந்நிலையில், குடியரசு நாளையொட்டி ஆளுநர் அளிக்கவுள்ள வழக்கமான தேநீர் விருந்தில் விசிக இந்த ஆண்டும் பங்கேற்காது என்று அவர் தெரிவித்துள்ளார்.
